(எம்.ஆர்.எம்.வஸீம்)
கொழும்பில் இருந்து அவிஸாவலை வரை இடம்பெறும் அனைத்து தனியார் போக்கு வரத்து பஸ் சேவைகளும் கலுஅங்கல சந்தி வரை பயணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண பயணிகள் போக்கு வரத்து அதிகார சபை தலைவர் பிரசன்ன சன்ஜீவ தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அவிஸாவலை மற்றும் கொஸ்கம பொலிஸ் பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், கொழும்பில் இருந்து அவிஸாவலை வரை இடம்பெறும் அனைத்து தனியார் பயணிகள் போக்கு வரத்து பஸ் சேவைகளும் கலுஅங்கல சந்திவரையே பயணிக்கும்.
அதன் பிரகாரம் 122ஆம் இலக்க பஸ்கள் ஹைலவல் வீதி ஊடாக புறக்கோட்டை மற்றும் மஹரகமையில் இருந்து அவிஸாவலை வரை பயணிக்கும் பஸ் வண்டிகளும் பழைய வீதி ஊடாக புறக்கோட்டையில் இருந்து அவிஸாவலை வரை பயணிக்கும் பஸ் வண்டிகளும் கலுஅங்கல பஸ் தரிப்பிடம் வரை பயணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பாதுக்கையில் இருந்து அவிஸாவலை வரை பயணிக்கும் 239/2 வீதி இலக்க பஸ் வண்டிகளும் கலுஅங்கல பஸ் தரிப்பிடம் வரையே பயணிக்கும். இந்த நடைமுறை நேற்றில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை, களனிவெளி புகையிரத வீதியின் புகையிரத சேவைகள் இன்றில் இருந்து கொழும்பு புறக்கோட்டையில் இருந்து வக புகையிரத நிலையம் வரை வரையறுக்கப்படுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
அவிஸாவலை மற்றும் கொஸ்கம பொலிஸ் அதிகார பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாலே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் கடுகொட, கொஸ்கம, புவக்பிடிய மற்றும் அவிஸாவலை ஆகிய புகையிரத நிலையங்கள் மறு அறிவித்தல் வரை பயணிக்களுக்காக திறக்கப்படமாட்டாது எனவும் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment