இன்று சிலர் தகனம், அடக்கம் என்ற தலைப்பை உருவாக்கி அரசியல் நன்மைகளைப் பெற முயற்சிக்கின்றனர் - அமைச்சர் இந்திக - News View

About Us

About Us

Breaking

Thursday, December 31, 2020

இன்று சிலர் தகனம், அடக்கம் என்ற தலைப்பை உருவாக்கி அரசியல் நன்மைகளைப் பெற முயற்சிக்கின்றனர் - அமைச்சர் இந்திக

இன்று சிலர் தகனம் மற்றும் அடக்கம் என்ற தலைப்பை உருவாக்கி அரசியல் நன்மைகளைப் பெற முயற்சிக்கின்றனர் என்றும் ஜனாதிபதி தனது சொந்த சக்தியால் அன்றி எல்லாக் கட்சிகளையும் கேட்டு நாட்டின் அனைத்து குடிமக்களின் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்தித்துதான் முடிவுகளை எடுக்கின்றார் என்று கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

இனவாதிகள், தீவிரவாதிகள், கடும் போக்காளர்கள் போன்ற குழுக்கள் நாட்டில் குழப்பத்தை உருவாக்கி அரசியல் நன்மைகளைப் பெற முயற்சிக்கின்றன என்று கூறிய அமைச்சர், ஜனாதிபதியும் அரசாங்கமும் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களிடமிருந்து ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் எடுத்துக் கொண்டு செயற்படுவதனால் சதிகாரர்கள் தங்கள் இலக்குகளை அடைய முடியாதுள்ளது என்றும் தெரிவித்தார்.

"அரசு தோல்வியடைந்துள்ளது" என்று காட்டுவதற்கு தோவியடைந்த அரசியல்வாதிகள் முயற்சித்த போதிலும் மகா சங்கத்தின் ஆலோசனையின் பேரில் அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் வெற்றிகரமாக உள்ளன என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

"உங்களுக்கு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்" தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் கட்டப்பட்ட 8 புதிய வீடுகளை பொது மக்களுக்கு கையளிக்கும் வைபவத்தில் இன்று (31) கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு உரையாற்றினார்.

திவுலப்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் கோன்கொடமுல்ல தெற்கு, ஹல்கஹவெலவத்த, கட்டுவெல்கம தெற்கு, தொட்டில்லகஹவத்த, அலுதபொல மேற்கு, படல்கம, சிரிகங்பாத மற்றும் பத்திகொட பகுதிகளில் இந்த வீடுகள் திறக்கப்பட்டன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகனத்திற்கு ஏற்ப, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் அறிவிறுத்தலின் பேரில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் "உங்களுக்கு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்" தேசிய வீடமைப்பு வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வேலைத் திட்டம் நாட்டில் உள்ள 14,022 கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாகும்.

இந்நிகழ்வில் திவுலப்பிட்டிய பிரதேச செயலாளர் திருமதி தனுஜா ராஜகருண, திவுலப்பிட்டிய பிரதேச சபை தலைவர் இந்திக ஜயசிங்க உட்பட பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment