கொரோனா தடுப்பூசிகான முதல் டோசை எடுத்து கொண்ட சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் - News View

About Us

About Us

Breaking

Friday, December 25, 2020

கொரோனா தடுப்பூசிகான முதல் டோசை எடுத்து கொண்ட சவுதி அரேபியா பட்டத்து இளவரசர்

சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டது.

கொரோனா வைரஸ் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8 கோடியை தாண்டியது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5.5 கோடியை தாண்டியுள்ளது. 17.50 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

உலக அளவில் கொரோனா பாதிப்பில் சவுதி அரேபியா தற்போது 35ஆவது இடத்தில் உள்ளது.

சவுதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 178 பேருக்கு தொற்று உறுதியானதால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 61 ஆயிரத்தைக் கடந்துள்ளது

கொரோனாவால் அங்கு மேலும் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 168 ஆக உள்ளது.

இதற்கிடையே, வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை அனைத்து நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டது.

No comments:

Post a Comment