மஹர சிறைச்சாலையின் கலக சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து தப்பியோடிய ஒருவர் இன்று (03) முற்பகல் ஒருகொடவத்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று அவர் தப்பியோடியிருந்ததாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
குறித்த கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் அதன் முடிவுகள் வரவுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரை மஹர சிறைச்சாலை கைதிகள் 14 பேர் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment