மட்டக்களப்பில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள் - பொதுமக்களை விழிப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

மட்டக்களப்பில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள் - பொதுமக்களை விழிப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றது. கடந்த நவம்பர் மாதம் 27 ஆந் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 04 ஆந் திகதி வரையில் 135 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 56 நோயாளர்களும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 32 நோயாளர்களும், கோறளைப் பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 நோயாளர்களும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 நோயாளர்களும், மண்முனைப் பற்று ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 நோயாளர்களும், மண்முனை வடக்கு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், வவுனதீவு மற்றும் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவருமாக மொத்தம் 135 பேர் டெங்கு நோய் பாதிப்புக்குள்ளானவர்களாக இனங் காணப்பட்டுள்ளனர்.

இருப்பினும் ஏறாவூர், செங்கலடி, பட்டிப்பளை, வெல்லாவெளி, கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.

மேலும் கடந்த 11 மாதங்களில் இம்மாவட்டத்தில் 2 ஆயிரத்தி 847 போர் டெங்கு நோய்த் தாக்கத்திற்குட்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இம் மழைகாலத்தில் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காத வகையில் சூழலை துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

No comments:

Post a Comment