சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடாத்துவதற்கு அனுமதி - வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் - News View

About Us

About Us

Breaking

Friday, December 25, 2020

சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடாத்துவதற்கு அனுமதி - வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்

சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் கடந்த 2004ஆம் ஆண்டு பாதிப்பை ஏற்படுத்திய சுனாமி இயற்கை அனர்த்தத்தினால் காவுகொள்ளப்பட்டோரின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ளது.

மேலும் தற்போது நாட்டில் உள்ள கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக ஒன்றுகூடல்கள் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சுனாமி இடரால் உயிரிழந்தோரை நினைவு கூரும் நிகழ்வுகளை அப்பகுதி சுகாதார பிரிவினரின் அனுமதியுடன் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அதன்படி கொரோனா பரவல் அச்சநிலையைக் கருத்திற்கொண்டு சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடத்த முடியும் என ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment