தடைகள் நீக்கப்பட்டு, வாழைச்சேனை மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 8, 2020

தடைகள் நீக்கப்பட்டு, வாழைச்சேனை மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதி

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடல் தொழிலுக்குச் செல்லும் தொழிலாளர்கள் இரண்டு மாதங்களின் பின்னர் தங்களது தொழிலை ஆரம்பித்துள்ளதாக வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக முகாமையாளர் ஜோர்ஜ் றெஜினோல்ட் விஜிதரன் தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த ஒக்டோபர் மாதம் 24ம் திகதி பெஹலியகொட மீன் சந்தைக்குச் சென்று வந்தவர்களினால் கொரோனா தொற்று இணங்காணப்பட்டதைத் தொடர்ந்து மீன்பிடித் துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டு மீனவர்கள் கடல் தொழிலுக்கு மறு அறிவித்தல் வழங்கும் வரையில் செல்ல வேண்டாமென்று சுகாதாரத் திணைக்களத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடல் தொழிலை நம்பி வாழும் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரம் இழந்து, பல கஷ்டங்களை அனுபவித்து வந்த நிலையில் மீனவர்களின் கஷ்ட நிலைமையையும், கொரோனா தொற்றின்மையையும் கருத்திற்கொண்டு சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி கடல் தொழிலுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் சுகாதார நடைமுறைகளைப்பேணி கடற்றொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, கடல் தொழில்களுக்கு படகுகள் கட்டங்கட்டமாக தங்களது பாதுகாப்புக்கருதி கடலுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மீனவர்கள் கடல் தொழிலுக்குச் செல்வதாக வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக முகாமையாளர் ஜோர்ஜ் றெஜினோல்ட் விஜிதரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment