பிரிட்டன் வரி கொள்கை மறுசீரமைப்புக்கு அமைவாக இலங்கையிலிருந்து அனுப்பப்படும் தபால் பொதிகளுக்கான கட்டணத்தில் மாற்றம் - News View

About Us

About Us

Breaking

Friday, December 25, 2020

பிரிட்டன் வரி கொள்கை மறுசீரமைப்புக்கு அமைவாக இலங்கையிலிருந்து அனுப்பப்படும் தபால் பொதிகளுக்கான கட்டணத்தில் மாற்றம்

2021 ஜனவரி முதல் பிரிட்டன் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வரி கொள்கை மறுசீரமைப்புக்கு அமைவாக பிரிட்டனுக்கு அனுப்பப்படும் தபால் பொதிகளுக்கான கட்டணம் மறுசீரமைக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு பிரிட்டனுக்கு அனுப்பப்படும் தபால் பொதிகள் தொடர்பில் 2021.01.01ஆம் திகதி தொடக்கம் பிரிட்டன் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வரி கொள்கை மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தல்

மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் பிரிட்டன் அரசாங்கத்தின் தபால் நிர்வாக பிரிவினால் அறிவிக்கப்பட்ட வகையில் 2021.01.01 திகதி தொடக்கம் தபால் பாவனையாளர்களினால் பிரிட்டனுக்கு அனுப்பப்படும் அனைத்து தபால் பொதிகளுக்காக கீழ்கண்ட சட்ட விதிகள் பொருத்தமானது என அறிவித்துள்ளது.

2. 2021.01.01 ஆம் திகதி தொடக்கம் அனைத்து தபால் பொதிகளுக்காக அந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் VAT வரி மறுசீரமைப்பு மற்றும் ஏனைய வரி மறுசீரமைப்பு கொள்கைக்கு உட்பட்டதாகும்.

3. தபால் இடப்படும் இலங்கையில் வாழும் நபர்களினால் பிரிட்டனில் வாழும் நபர்களுக்கு (வெறும் தனிப்பட்ட ரீதியில்) அனுப்பப்படும் தபால் பொதிகளின் வர்த்தக பெறுமதி (ஸ்டெர்லிங் பவுண்ட்) £ 39 க்கு குறைந்த பொருட்களுக்காக மாத்திரம் இந்த வரி கொள்கை பொருந்தாது.

4. மேற்படி (3) உட்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வரி நிவாரணத்தை பெற்றுக்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட பொருள் தனிப்பட்ட பொருளாக தெளிவாக உறுதிப்படுத்தப்படுவதுடன், அதற்கான Invoice ஆவணம் பொருட்களுடன் அனுப்பவேண்டும். அவ்வாறு இல்லாத பட்ச்சத்தில் சம்பந்தப்பட்ட வரி கொள்கைக்கு அமைவாக பிரிட்டிஷ் சுங்க பிரிவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

5. நாட்டிலிருந்து பிரிட்டனுக்கு அனுப்பப்படும் தபால் பொதி சந்தை பெறுமதி (ஸ்டெர்லிங் பவுண்ட்) £ 135 வரையிலான பொருட்களுக்கு பிரிட்டிஷ் VAT கொள்ளைக்கு உட்படுவதுடன், (ஸ்டெர்லிங் பவுண்ட்) £ 135 க்கு மேற்பட்ட பெறுமதியை கொண்ட பொருட்களுக்கான VAT கொள்ளைக்கு மேலதிகமாக பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படும் ஏனைய வரிக் கொள்ளைக்கு உட்பட்டதாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

6. இந்த வரிக்கொள்கை தொடர்பாக அனைத்து தகவல்கள் கீழ்வரும் இணையத்தளத்தின் மூலம் பாவனையாளர்கள் அறிந்து கொள்ள முடியும் சம்பந்தப்பட்ட சட்ட விதிகள் தொடர்பாக கீழ்கண்ட இணைய முகவரியை பயன்படுத்தி பாவனையாளர்கள் தெளிவுப்படுத்திக் கொள்ளவேண்டும்.

7. 2021.01.01 ஆம் திகதி தொடக்கம் சம்பந்தப்பட்ட வரி கொள்ளைக்கு அமைவாக பிரிட்டனுக்கு தபால் பொதிகளை அனுப்பும் அனைத்து பாவனையாளர்களும் செயல்படுவதுடன் அவ்வாறு செயல்படாத பட்சத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தபால் / பிரிட்டிஷ் சுங்கத்தினால் சம்பந்தப்பட்ட பொருள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைக்கு பாவனையாளர்கள் தனிப்பட்ட ரீதியில் பொறுப்பு கூறுவதுடன் இலங்கை தபால் திணைக்களம் இந்த வரி அல்லது ஏனைய வரி செலுத்துவது தொடர்பாக எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்பதை தெரிவிக்கின்றோம்.

No comments:

Post a Comment