கிண்ணியாவில் கொட்டும் கடும் மழையிலும் ஜனாசா எரிப்பினை எதிர்த்து கவன் சீலைப் போராட்டம் கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று (27) இடம்பெற்றது.
கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்யாது எரிப்பது கண்டணத்துக்குரியது. இதனால் மத சுதந்திரம் மறுக்கப்படுகிறது.
சிவில் சமூக ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்ட இக்கவனயீர்ப்பில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள மகஜரும் கிண்ணியா பிரதேச செயலாளரிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.
இதில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றதுடன் கிண்ணியா உலமா சபை, சூரா சபை,வர்த்தக சம்மேளனம், அனைத்து பள்ளிவாயல் சம்மேளனம் உட்பட உள்ளூராட்சி மன்ற தவிசாளர், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு வெள்ளை துணியிலான கவன் சீலை துணி துண்டுகளை கட்டி ஜனாசா எரிப்புக்கான எதிர்ப்பினை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment