புகையிரத, பஸ் சேவைகள் வழமையான முறையில் இடம்பெறும்...! - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 30, 2020

புகையிரத, பஸ் சேவைகள் வழமையான முறையில் இடம்பெறும்...!

(இராஜதுரை ஹஷான்)

புகையிரத சேவைகள் நாளை வழமையான முறையில் இடம்பெறும். தூர பிரதேசங்களுக்கான புகையிரத சேவை குறித்து இவ்வாரம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்க பிரதான செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் புகையிரத சேவையினை ஆரம்பிப்பது தொடர்பில் விசேட திட்டம் வகுக்கப்பட்டுள்ளன.

நாளை மறுதினம் முதல் புகையிரத சேவை வழமை போன்று இடம்பெறும். தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் புகையிரத சேவை முடக்கப்பட்டுள்ளது. தூர பிரதேச புகையிரத சேவை குறித்து இவ்வாரம் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

நாளை மறுதினம் முதல் தூர பிரதேச பேருந்து சேவை வழமை போன்று சேவையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்துமாறு பஸ் உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளதாக தேசிய போக்கு வரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பேருந்து சேவையில் ஈடுபடுத்தவுள்ளது.

போக்கு வரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத சுமார் 10 பேருந்துகள் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளன.

எதிர்வரும் நாட்களிலும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ள தேசிய போக்கு வரத்து ஆணைக்குழு, சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத பஸ்களின் அனுமதிப்பத்திரத்தையும் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

இதனிடையே, ஜனவரி முதல் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்கு வரத்து சபையும் குறிப்பிட்டுள்ளது. 

ஆசன எண்ணிக்கைக்கு அமைய, பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு பஸ் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்கு வரத்து சபை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment