இஸ்ரேலுக்கான புதிய தூதுவரை நியமித்தது துருக்கி - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

இஸ்ரேலுக்கான புதிய தூதுவரை நியமித்தது துருக்கி

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இஸ்ரேலுக்கான புதிய தூதுவர் ஒருவரை துருக்கி நியமித்துள்ளது.

முற்றுகையில் உள்ள காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எதிராகவே துருக்கி 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் தமது தூதுவரை வாபஸ் பெற்றது. 

இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவில் இருந்து ஜெரூசலத்திற்கு மாற்றியதற்கும் துருக்கி கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. 

இந்நிலையில் பதவி ஏற்கவுள்ள அமெரிக்க அடுத்த ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்துடன் உறவை பலப்படுத்தும் வகையில் 40 வயதான உபுல் உலுடாஸ் இஸ்ரேலுக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டிருப்பதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

உலுடாஸ் பலஸ்தீன ஆதரவு கொண்ட புத்திசாலி என்று கூறப்பட்டுள்ளது. ஜெரூசலத்தில் இருக்குத் ஹெப்ரூ பல்கலைக்கழகத்தில் ஹீப்ரூ மற்றும் மத்திய கிழக்கு அரசில் பற்றி கற்றிருக்கும் அவர் இதற்கு முன்னர் இராஜதந்திர பணிகளில் அனுபவம் அற்றவராவார்.

2010 இல் பலஸ்தீன ஆதரவு துருக்கிய செயற்பாட்டாளர்கள் இஸ்ரேல் இராணுவத்தால் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேலுடனான துருக்கியின் உறவு முறிந்த பின் 2016 இல் மீண்டும் அது வழமைக்கு திரும்பியது. எனினும் 2018 இல் அமெரிக்க தூதரக மாற்றத்தை அடுத்து அந்த உறவில் மீண்டும் முறுகல் ஏற்பட்டது.

No comments:

Post a Comment