பிரான்ஸ் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் அறிவிப்பு செய்தார் பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Friday, December 4, 2020

பிரான்ஸ் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் அறிவிப்பு செய்தார் பிரதமர்

பிரான்சில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியை சில நாடுகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளன. சமீபத்தில் ஜப்பான் நாட்டு அரசு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.

இந்த நிலையில் பிரான்சில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெஸ் கூறும்போது, பிரான்ஸ் மக்கள் அனைவருக்கும தடுப்பூசி இலவசமாக போடப்படும். இதற்காக வருகின்ற நிதியாண்டில் 1.5 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கப்படும். 

ஐரோப்பிய ஒழுங்குமுறை விற்பனை ஆணையத்தின் ஒப்புதலுக்காக உள்ளதால் இன்னும் சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி பிரச்சாரம் தொடங்கப்படும்.

பல்வேறு மருந்து நிறுவனங்களிடம் இருந்து 200 மில்லியன் டோஸ் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பாதுகாப்பாக இருக்கும் என்று மக்களுக்கு உறுதி அளிக்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment