மஹர சிறைச்சாலை சம்பவத்தின் விசாரணை குழுவின் அறிக்கை மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும் - செஹான் சேமசிங்க - News View

About Us

About Us

Breaking

Thursday, December 3, 2020

மஹர சிறைச்சாலை சம்பவத்தின் விசாரணை குழுவின் அறிக்கை மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும் - செஹான் சேமசிங்க

(இராஜதுரை ஹஷான்) 

மஹர சிறைச்சாலை அமைதியின்மை சம்பவத்தை கொண்டு எதிர்க்கட்சியினர் சமூகத்தின் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளார்கள். விசாரணை குழுவின் அறிக்கை மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும் என சமுர்த்தி, நுண்நிதி கடன் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். 

அநுராதபுர பிரதேசத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தேசிய உற்பத்திகளை மேம்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து அமைச்சுக்களுக்கும் ஒதுக்கீடு செய்யும் நிதி குறித்து ஆராய விசேட பொறிமுறை தயாரிக்கப்பட்டுள்ளது. 

வரவு செலவுத் திட்டத்தை கொண்டு அரசியல் ரீதியில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்கள். இன்று மஹர சிறைச்சாலை சம்பவத்தை பற்றிக் கொண்டார்கள். மஹர சிறைச்சாலை அமைதியின்மை எதிர்பாராத வகையில் இடம்பெற்ற ஒரு சம்பவமாகும். 

மஹர சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளது என எதிர்த்தரப்பினர் சமூகத்தின் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்தார்கள். சம்பவம் குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும். 

நுண்கடன் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வழிமுறைகள் வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றார்.

No comments:

Post a Comment