பாபர் அசாம் காயத்தால் விலகல் : மிகப்பெரிய இழப்பு என வக்கார் யூனிஸ் கவலை - News View

Breaking

Post Top Ad

Tuesday, December 15, 2020

பாபர் அசாம் காயத்தால் விலகல் : மிகப்பெரிய இழப்பு என வக்கார் யூனிஸ் கவலை

நியூசிலாந்துக்கு எதிரான ரி 20 தொடருக்காக தயாராகிக் கொண்டிருந்த பாபர் அசாம் காயம் அடைந்ததால், பாகிஸ்தான் அணி மிகப்பெரிய சோகத்தில் உள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ரி 20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. 

14 நாட்கள் கோரன்டைனில் இருக்கும் பாகிஸ்தான் வீரர்கள், பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

பயிற்சியின்போது பாகிஸ்தான் அணியின் தலைவரும், தலைசிறந்த துடுப்பாட்ட வீரருமான பாபர் அசாமின் வலது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. 

மருத்துவ பரிசோதனையில் முறிவு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் 12 நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ரி20 போட்டி எதிர்வரும் 18ம் திகதி, 20ம் திகதி, 22ம் திகதிகளில் நடக்கிறது. இதனால் பாபர் அசாம் ரி 20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

நட்சத்திர பேட்ஸ்மேனாக பாபர் அசாம் விலகியது பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பாதிப்பு என அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

பாபர் அசாம் குறித்து வக்கார் யூனிஸ் கூறுகையில் ‘‘எல்லா வடிவிலான கிரிக்கெட்டிலும் பாபர் அசாம் தற்போது உலகின் சிறந்த வீரராக உள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆகையில் அவர் இல்லாதது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. அவரைக் கண்டு மற்ற அணிகள் பயப்படும் போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பாக தவறனா நேரத்தில் ஏற்பட்ட காயம் துரதிருஷ்டவசமானது’’ என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad