உடலை அடக்கம் செய்யலாம் என சுகாதார தரப்பினர் குறிப்பிட்டால் செயற்படுத்த தயாராக உள்ளோம் - அமைச்சர் சிசிர ஜயகொடி - News View

About Us

About Us

Breaking

Thursday, December 24, 2020

உடலை அடக்கம் செய்யலாம் என சுகாதார தரப்பினர் குறிப்பிட்டால் செயற்படுத்த தயாராக உள்ளோம் - அமைச்சர் சிசிர ஜயகொடி

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம் சமூகத்தினரது உடலை தகனம் செய்யும் விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள். வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்யலாம் என சுகாதார தரப்பினர் குறிப்பிட்டால் அதனை செயற்படுத்த பின்வாங்கமாட்டோம் என ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி ,தேசிய மருத்துவ மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்யும் விவகாரம் தற்போது அரசியாக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம் சமூகத்தினரது உடல் தகனம் செய்வதற்கு முஸ்லிம் சமூகத்தினர் ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பை தெரிவித்தார்கள். இதனை பயன்படுத்தி எதிர்கட்சியினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள்.

உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார குழு அறிவுறுத்தினால் அதனை முழுமையாக செயற்படுத்த தயாராக உள்ளோம். எம்மதத்தினரது உரிமைகளையும் முடக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தி தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டுமாயின் நாட்டு மக்கள் அனைவரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த ஆயுர்வேத மருத்துவ முறைமையில் தயாரிக்கப்பட்ட மருத்துவ முறைமை மற்றும் மருத்துவ பாணம் குறித்து விஞ்ஞான முறைமையில் பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றன. தேசிய பாரம்பரிய மருத்துவ தய முறைமைக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் என்றார்.

No comments:

Post a Comment