தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ஒருவர் திடீர் மரணம் - இரகசியமாக புதைத்தமை குறித்து பொலிஸ் விசாரணை - News View

Breaking

Post Top Ad

Wednesday, December 23, 2020

தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ஒருவர் திடீர் மரணம் - இரகசியமாக புதைத்தமை குறித்து பொலிஸ் விசாரணை

பேருவளையில் குடும்ப உறுப்பினர்கள் நால்வர் கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதியான நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவர் திடீர் மரணமடைந்துள்ளார்.

அந்த பகுதியைச் சேர்ந்த 78 வயது வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் இரகசியமாக புதைக்கப்பட்டமை தொடர்பில் பேருவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இந்த வீட்டின் உரிமையாளர்கள் கடந்த 11ஆம் திகதி பேருவளை சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்திற்கு வந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்கு அனுமதி கோரியுள்ளனர். 

இதன்போது இந்த நபர்களின் குடும்பத்தினர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வேறு ஒரு நபரால் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்டது. 

அதற்கமைய சுகாதார பரிசோதகர்கள் குடும்பத்தில் 15 பேரிடம் மேற்கொண்ட PCR பரிசோதனையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது.

அதன் பின்னர் வீட்டிலிருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். அந்த வாரத்தில் அவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இவ் வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார். அன்று இரவில் குடும்பத்தினர் அவரை புதைத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை ஒன்றை ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad