தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் 9 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 23, 2020

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் 9 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டது

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் மேலும் இரு கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து 09 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தம்புள்ள மாநகர சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

தம்புள்ள பிரதேசத்தில் இதுவரை 20 பேர் கொவிட்-19 தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மரக்கறி வகைகளை தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு எடுத்து வரும் விவசாயிகள் மற்றும் அவற்றை கொள்வனவு செய்வதற்கு வருகை தரும் வியாபாரிகள் உள்ளிட்ட சுமார் 70 பேர்களுக்கு அதிக எண்ணிக்கையானோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

முழு நாட்டினதும் காய்கறித் தேவைகளை நிறைவு செய்யும் விதத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மூடி விடாதவாறு தொடர்ந்தும் அதன் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தம்புள்ள பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின் தலைவர் சன்ன எராவுல தெரிவித்தார். 

மத்திய நிலையத்திற்கு காய்கறி வகைகளை எடுத்து வரும் விவசாயிகள் சுகாதார விதி முறைகளைப் பேணுமாறும் இன்றேல் கிராமப் புறங்களுக்கு மாத்திரமன்றி விவசாயப் பிரதேசங்களுக்கும் கொவிட்-19 வைரஸ் பரவும் ஆபத்து காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தம்புள்ள நிருபர்

No comments:

Post a Comment