யாழ்ப்பாணம், வலிகாமம் வலய பாடசாலைகள் மூடப்பட்டன - News View

Breaking

Post Top Ad

Monday, December 14, 2020

யாழ்ப்பாணம், வலிகாமம் வலய பாடசாலைகள் மூடப்பட்டன

வலிகாமம் மற்றும் யாழ்ப்பாணம் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், சட்டத்தரணி எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் எழுத்து மூல ஆலோசனைக்கமைய கல்வி அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின் மாகாண ஆளுநரின் அனுமதியுடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 

மருதனார் மடம் கொரோனா தொற்றுப் பரவல் கொத்தணியின் பின்னர் வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட உடுவில் மற்றும் தெல்லிப்பழை கல்விக் கோட்டப் பாடசாலைகள் நேற்று (14) திங்கட்கிழமை மூடப்பட்டன.

இந்த நிலையில் வலிகாமம் மற்றும் யாழ்ப்பாணம் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் இன்று செவ்வாய்க்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன என்றார்.

யாழ்.விசேட நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad