வவுனியா நகரின் நான்கு பாடசாலைகள் மூடப்பட்டன - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

வவுனியா நகரின் நான்கு பாடசாலைகள் மூடப்பட்டன

வவுனியாவில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நகரப் பாடசாலைகள் நான்கு மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்படுகின்றன என்று வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று மாலை மூவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், கற்குழி பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவருக்கும், தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்குமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து வவுனியா நகரில் உள்ள சி.சி.ரி.எம்.எஸ். பாடசாலை, காமினி மகா வித்தியாலயம், தமிழ் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் இறம்பைக் குளம் மகளிர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்படுகின்றன.

வவுனியா சுகாதாரப் பணிமனை அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பாடசாலைகள் இவ்வாறு மூடப்படுவதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதகிருஷ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment