காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் கத்தியால் குத்தி கொலை - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 9, 2020

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் கத்தியால் குத்தி கொலை

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் .

இந்தச் சம்பவம் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலமுனை பகுதியில் நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்றது.

இந்தச் சம்பவத்தில் 35 வயதான கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 21 வயதான இளைஞர் ஒருவர் அக்கரைப்பற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு பாலமுனையில் அமைந்துள்ள தனது உறவினர் ஒருவரின் காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக சமாதானம் செய்ய சென்ற வேளை, குறித்த நபரின் உறவினர் ஒருவரே அவரை கொலை செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் இதன்போது இடம்பெற்ற வாக்குவாதம் ஒன்றில் கத்தியால் கான்ஸ்டபிள் குத்தப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment