யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு காரில் கேரள கஞ்சா கடத்திய இருவரை மட்டக்களப்பில் வைத்து இன்று (03) அதிகாலை கைது செய்ததுடன் 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி ஜே.எஸ்.ஏ. ஜெயசிங்க தெரிவித்தார்.
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி ஜே.எஸ்.ஏ. ஜெயசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான இன்று வியாழக்கிழமை அதிகாலை மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் வைத்து குறித்த காரை மடக்கிபிடித்து சோனை செய்ததில் காரில் சூட்சகமாக மறைத்துவைக்கப்பட்ட நிலையில் 2 கிலோ 200 கிராம் கொண்ட கேரளா கஞ்சாவை மீட்டுள்ளனர்
இதில் கைது செய்யப்பட்டவர்கள் பளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் கஞ்சா வியாபாரத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
மட்டக்களப்பு நிருபர் சரவணன்
No comments:
Post a Comment