வடக்கு, கிழக்கு மக்கள் கூட மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோரவில்லை, கொரோனா வைரஸ் தருணத்தில் தேர்தல் எதற்கு? - எல்லே குணவன்ச தேரர் - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

வடக்கு, கிழக்கு மக்கள் கூட மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோரவில்லை, கொரோனா வைரஸ் தருணத்தில் தேர்தல் எதற்கு? - எல்லே குணவன்ச தேரர்

கொரோனா வைரஸ் ஆபத்து நிலவுகின்ற சூழலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்வது குறித்து எல்லே குணவன்ச தேரர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் பெருந்துயரம் மற்றும் நெருக்கடிகளின் மத்தியில் வாழ்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த தருணத்தில் தேர்தல்களை நடத்துவது அரச முதலீட்டை வீணடிக்கும் மற்றுமொரு செயலாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது மக்கள் கேட்கும் தேர்தல் இல்லை என தெரிவித்துள்ள அவர் மக்கள் நிராகரித்துள்ள மாகாண சபைக்கான தேர்தல்களை நடத்துவது அரசாங்கத்திற்கு விசுவாசமானவர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கான முயற்சியாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்கள் கூட தேர்தலை நடத்துமாறு கோரவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்டுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏன் இவ்வளவு அதிகாரத்தை பெற முயல்கின்றீர்கள்? மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்கப்பட்டுள்ளது. 20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டு மேலும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் மாகாண சபைத் தேர்தல்களையும் நடத்தி அந்த அதிகாரங்களையும் குவிக்க முயல்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment