(இராஜதுரை ஹஷான்)
நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் காணி திருத்தச் சட்டம் மீறப்பட்டுள்ளது. காணி முறைகேடு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காணி விவகார அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல்வாதிகளினால் அரச காணிகள் மோசடி செய்யப்பட்டுள்ளன. காணி திருத்தச் சட்டத்துக்கு முரண்பட்ட விதத்தில் அரசியல்வாதிகள் அரச காணிகளை தங்களின் குடும்ப சொத்தாக பாவித்துள்ளார்கள்.
கொழும்பு, களுத்துறை, காலி, கண்டி மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணி முறைகேடுகள் பெருமளவில் இடம்பெற்றுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுமக்களின் காணிகள் கூட அரசியல்வாதிகளின் ஆதரவுடன் மோசடி செய்யப்பட்டு பிற தரப்பினருக்கு கையகப்படுத்தப்பட்டுள்ளன.
காணி முறைகேடுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment