‘கொவிட்-19 தடுப்பு மருந்து கட்டாயமில்லை’ - உலக சுகாதார ஸ்தாபனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 9, 2020

‘கொவிட்-19 தடுப்பு மருந்து கட்டாயமில்லை’ - உலக சுகாதார ஸ்தாபனம்

உலகெங்கும் அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பு மருந்தைச் செலுத்துவதைக் கட்டாயமாக்கும் திட்டம் ஏதுமில்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.

அவரவர் சூழ்நிலைக்கு ஏற்பவும், எத்தகைய வேலையில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தும், தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொள்வது குறித்து முடிவெடுக்கும் உரிமை தனி நபர்களுக்கே தரப்பட வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

மருத்துவமனைகளில் முக்கியப் பணியாற்றுவோர், தங்கள் நலன் கருதியும், நோயாளிகளின் பாதுகாப்பு கருதியும் தடுப்பு மருந்துக்கு வலுவாகப் பரிந்துரைக்கப்படுவர்.

பொதுமக்கள் அனைவருக்கும் கட்டாயத் தடுப்பு மருந்து எனும் உத்தியைவிட, தேவைப்படுவோருக்கும், எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கும் தடுப்பூசி போடுவதே சிறந்தது என்று உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பொறுப்பேற்கவிருக்கும் ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்ற உலக சுகாதார ஸ்தாபனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

முன்னதாக ஜனாதிபதி டிரம்ப்பின் நிர்வாகத்தின் கீழ், உலக சுகாதார ஸ்தாபனத்திலிருது அமெரிக்கா விலகிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment