கொரோனா தொற்று காரணமாக ஏற்படும் முஸ்லிம் மரணங்களில் பாரிய சந்தேகம் இருக்கின்றது : அஸாத் சாலி..! - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 30, 2020

கொரோனா தொற்று காரணமாக ஏற்படும் முஸ்லிம் மரணங்களில் பாரிய சந்தேகம் இருக்கின்றது : அஸாத் சாலி..!

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொரோனா தொற்று காரணமாக ஏற்படும் முஸ்லிம் மரணங்களில் பாரிய சந்தேகம் இருக்கின்றது. அதனால் இது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

கொரோனா தொற்றில் மரணித்தவர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் முஸ்லிம்களாக இருப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 22 மில்லியன் சனத் தொகையைக் கொண்ட இலங்கையில் சுமார் 10 வீதமே முஸ்லிம்கள். ஆனால் கொரோனா தொற்றில் இலங்கையில் மரணித்தவர்களில் மொத்த எண்ணிக்கையில் 10 வீதம் கொண்ட முஸ்லிம் சமூகத்தில் இருந்து 80 வீதமான கொரோனா மரணங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அதனால் இந்த மரணங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என அரசாங்கத்தை கேட்கின்றோம்.

அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஆனால் அவர்கள் அங்கு கொண்டு சேர்க்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு அங்கு எந்தவித மருத்துவ சிகிச்சையும் இடம்பெறுவதில்லை என அங்கு சென்று வந்தவர்கள் பலரும் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் கொரோனா தொற்றை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் என்டிஜன் பரிசோதனை மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை என்பவற்றில் முரண்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் 14 நாட்கள் இருந்து விட்டு வீடு திரும்பியதுடன் மரணித்த சம்பவங்களும் இடம்பெற்றிக்கின்றன. 

எனவே இந்த விவகாரங்களுக்கு பின்னணியில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அதனால் இது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment