மழை நின்றாலும் தூவானம் விடவில்லை என்பது போல சம்பவங்கள் இடம்பெற்று கொண்டுதான் இருக்கின்றன, இதன் உச்ச கட்டமாகத்தான் நீதி அமைச்சர் அலி சப்ரியை கைது செய்ய வேண்டும் என்று கடுமை போக்காளர்கள் கொக்கரிக்கின்றனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி அமைப்பாளரும், இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை உறுப்பினருமான றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.
உலகம் தழுவிய முஸ்லிம் மக்களின் வாழ்க்கை சட்டம் அவர்களின் இஸ்லாமிய மார்க்கமே ஆகும். அதற்கு மாறுபட்ட விடயங்களில் எந்த வகையிலும் சமரசத்துக்கு இடமே கிடையாது என்பது எமது பொதுவான நியதியும் ஆகும்.
இறந்த உடல்களுக்கு எழுந்து நடமாட முடியாதே ஒழிய உணர்வுகள் இருக்கவே செய்கின்றன என்பதை நாம் சந்தேகத்துக்கு அப்பால் என்றைக்குமே விசுவாசிப்பவர்கள்.
இந்த வகைகளில்தான் கொரோனாவின் பேரில் ஜனாஸாக்கள் கட்டாய எரிப்புக்கு உட்படுத்தப்படுவது என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை நம்பிக்கைகள் மற்றும் விசுவாசங்கள் ஆகியவற்றுக்கு எரியூட்டுகின்ற செயலாகவே எமது சமூகத்தால் பார்க்கப்படுகின்றது.
அவரவர் விரும்புகின்ற மதத்தை பின்பற்றுவதற்கும், அதன்படி ஒழுகுவதற்கும் இந்நாட்டு பிரஜைகள் அனைவருக்கும் பூரணமான மட்டுப்பாடற்ற சுதந்திரம் அரசியல் அமைப்பில் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது.
No comments:
Post a Comment