பைடனின் ஜனாதிபதிக்கான ட்விற்றர் கணக்கில் எவரும் இல்லை - News View

Breaking

Post Top Ad

Friday, December 25, 2020

பைடனின் ஜனாதிபதிக்கான ட்விற்றர் கணக்கில் எவரும் இல்லை

அமெரிக்காவில் ஜனாதிபதி மாற்றம் இடம்பெறுவதற்கு முன் ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ ட்விற்றர் கணக்குகளிலிருந்து அனைத்து தொடருனரும் அகற்றப்படுவர் என்று ட்விற்றர் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் பொறுப்பேற்பதற்கு முன், @POTUS, @FLOTUS கணக்குகளுக்கு உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்கள் நீக்கப்படவுள்ளனர்.

அப்படியென்றால், பைடன் கணக்குகளுக்கு எந்தவொரு இரசிகரும் இல்லாத நிலையில் அவற்றைப் பெறவுள்ளார்.

அவரது நிர்வாகம் ட்விற்றரின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த போதும், நிறுவனம் அதன் முடிவில் உறுதியாய் உள்ளதாகக் கூறப்பட்டது.

அந்த நடவடிக்கை மூலம் பைடனின் சொந்த ட்விற்றர் கணக்கு பாதிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது. அந்தக் கணக்கில் அவருக்கு 21.7 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வ கணக்குகளை முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவிடமிருந்து பெற்றபோது, அவர் அனைத்து ரசிகர்களையும் தக்கவைத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. 

எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்கும்போது ஜனாதிபதிக்கான ட்விற்றர் கணக்குகள் அவருக்கு மாற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad