(இராஜதுரை ஹஷான்)
பேருவளை ரயில் நிலைய சேவையாளருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பேருவளை ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்க பிரதான செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ரயில் சேவையாளருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிப்பட்டதை தொடர்ந்து ரயில் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் 4 சேவையாளர்கள் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
ரயில் நிலையத்தில் கிருமி தொற்று நீக்கம் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
இப்பிரதேச ரயில் பொதுப் பயணிகளின் நலன் கருதி பேருவளை ரயில் நிலைய நேர அட்டவணை பிரகாரம் நிறுத்தப்பட்ட ரயில்கள் மக்கொன, மற்றும் ஹெட்டிமுல்ல உப ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என்றார்.
No comments:
Post a Comment