ஹொரன தொழிற்சாலையில் 37 இந்தியர்கள் உட்பட 52 பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 15, 2020

ஹொரன தொழிற்சாலையில் 37 இந்தியர்கள் உட்பட 52 பேருக்கு கொரோனா

ஹொரனவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் 52 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து குறித்த தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் தொழிற்சாலையில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஐந்து ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அனைத்து ஊழியர்களும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களில் 47 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

அவர்களில் 37 பேர் தொழிற்சாலையில் பணிபுரியும் இந்திய பிரஜைகள் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment