மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காவத்தமுனை எனும் கிராமத்தில் அமைந்துள்ள உயர் தரம் வரையான வகுப்புக்களை கொண்ட ஒரு பாடசாலையே அல்-அமீன் வித்தியாலயம்.
அல்-அமீன் வித்தியாலயமானது, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட, கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்தில் அமைந்துள்ள ஓர் பாடசாலையாகும்.
இங்கு பிர்தௌஸ் அதிபர் அவர்களின் ஓய்வின் பின்னர் இப்பாடசாலையினை பொறுப்பேற்று வழிநடாத்துவதற்கு எந்தவிதமான அதிபர்களும் முன்வரவில்லை.
கடந்த ஐந்து மாத காலமாக இப்பாடசாலைக்கு ஒரு அதிபரை பெற வேண்டும் என்ற நோக்கில் ஏனைய பாடசாலையில் பிரதி அதிபராக இருக்கின்ற பொறுப்புக்களை ஏற்காது இருக்கின்ற அதிபர்கள் என சிலரிடம் பாடசாலை அபிவிருத்தி சங்கம் பழைய மாணவர்கள் என பேசியிருந்தும் அவர்கள் பொறுப்பெடுக்க முன்வரவும் இல்லை, முறையாக அலுவலக ரீதியாக அதிபருக்கான விண்ணப்பம் கோரப்பட்டும் யாரும் விண்ணப்பிக்கவும் இல்லை.
அன்பார்ந்த அதிபர்களே நீங்கள் எமது பாடசாலையினை பொறுப்பெடுக்க முன்வராததற்கான காரணம் என்ன?
நீங்கள் வழிநடாத்துவதற்கு தகுதியற்ற பாடசாலையா இது?
இங்கு இருக்கின்ற மாணவர்கள் கல்வி கற்பதற்கு தகுதியற்றவர்களா?
அல்லது ஒரு ஒதுக்கப்பட்ட கிராமமா இது?
இங்கும் நல்ல குணம் கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இருக்கின்றார்கள், இப்பாடசாலை ஊடாக பல்கலைக்கழகம் நுழைந்த மாணவர்கள் இருக்கின்றார்கள், சாதாரண தரப் பரீட்சையில் 8A, B பெறுபேறு பெற்ற மாணவர்கள் இருக்கின்றார், வருடாந்தம் இரண்டுக்கு குறையாத மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கின்றார்கள், நாடகம் மற்றும் விளையாட்டு என பல்வேறுபட்ட துறைகளில் தேசிய மட்டம் சென்று வெற்றியீட்டிய மாணவர்கள் இருக்கின்றார்கள் இதற்கு மேலாக சட்டத்தரணிகள், ஆசிரியர்கள், வைத்தியர் பட்டதாரிகள் மற்றும் உலமாக்கள் என பலர் இருக்கின்றார்கள்.
ஒரு சமூகத்தின் தலைவிதியினை மாற்றுகின்ற கல்விக் கூடத்தினை வழிநடாத்த நீங்கள் மறுக்கின்ற செயற்பாடு ஒரு நல்ல ஆரோக்கியமாக சமூகமொன்றினை கல்குடாவில் உருவாக்க வழியேற்படுத்துமா??
கல்குடா வாழ் சமூக சேவையாளர்களே கல்விமான்களே புத்திஜீவிகளே காவத்தமுனை பாடசாலையின் நிலைபற்றி சற்று சிந்தனை செய்யுங்கள்...
அன்பார்ந்த அதிபர்களே....
நாங்கள் பழைய மாணவர்கள் என்ற ரீதியில் உங்களுக்கு மிகவும் உதவியாக இருப்போம் பாடசாலை தேவைகளை நிறைவேற்ற ஒத்துழைப்போம் தயவு செய்து முன்வாருங்கள்.
பிழை ஏதும் இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் ஒரு சமூகம் மீது கொண்ட அக்கறையின் வெளிப்பாடே இது. உங்களது சிந்தனைக்காக.
எம்.ஐ.எம். றனீஸ்
செயலாளர்
பழைய மாணவர்கள் சங்கம்
மட்/காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயம்
No comments:
Post a Comment