(செ.தேன்மொழி)
கஹட்டகஸ்திஹிலிய பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கஹட்டகஸ்திஹிலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (26) காட்டு யானை ஒன்று அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த வீடுகளையும், பயிர்ச் செய்கையையும் சேதப்படுத்துவதாக பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு முறைப்பாடளித்துள்ளனர்.
இதன்போது அங்கு வந்துள்ள பொலிஸார் யானையை விரட்டும் நோக்கத்தில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பதற்றமடைந்த யானை பொலிஸாரை தாக்க முற்பட்டுள்ளதுடன், பின்னரே பொலிஸார் யானை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும், கஹட்டகஸ்திஹிலிய பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment