நாடாளுமன்றத்திற்கு வருமாறு பசிலுக்கு ஜனாதிபதி கோட்டா அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, December 4, 2020

நாடாளுமன்றத்திற்கு வருமாறு பசிலுக்கு ஜனாதிபதி கோட்டா அழைப்பு

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்குமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது, பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்றப் பிரவசம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த சில நாட்களுக்கு முன்னரும், பசில் ராஜபக்ஷவிடம் தான் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்

எனினும், தனக்கு விரைவில் நாடாளுமன்றம் வருவதற்கான எண்ணம் கிடையாது என பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது கூறியுள்ளார்.

இதேவேளை, பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு வருகை தர வேண்டும் என வலியுறுத்தி தயாரிக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டங்களையும் பிரதிநித்துவப்படுத்தி 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment