சம்மாந்துறை மண்னுக்கு பெருமை சேர்த்த டாக்டர் சபீக் - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

சம்மாந்துறை மண்னுக்கு பெருமை சேர்த்த டாக்டர் சபீக்

(சர்ஜுன் லாபீர்)

சம்மாந்துறை மண்னினை பிறப்பிடமாகக் கொண்ட அஹமட் முஸ்தபா இப்றாலெப்பை மற்றும் கலந்தர்வெப்பை சல்மா ஆகியோரின் மூத்த புதல்வரான சபீக் என்பவர் இன்று (14) நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணராக கடமையேற்றுக் கொண்டார்.

சிறு பராயத்தில் தனது தந்தையை இழந்த இவர் தனது தந்தையின் சகோதரரான அகமட் முஸ்தபா ரசீட் என்பரின் நேரடி கண்காணிப்பில் வளர்ந்து இன்று இந்நிலையினை எட்டியுள்ளார்.

இவர் தனது ஆரம்ப கல்வியை சம்மாந்துறை அல்-அமீர் வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியிலும் (தேசிய பாடசாலை) கற்று பின்னர் களனி பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்திற்கு தெரிவானார்.

தனது வைத்திய சேவையினை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சேவையாற்றிய வேளையில் பொது வைத்திய நிபுணர் பரீட்சையில் சித்தி பெற்று இன்று தனது கடமையினை ஆரம்பிக்கின்றார்.

இவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாவது அரபுமொழி பேராசிரியர் எம்.எஸ்.எம் ஜலாத்தீனின் மூத்த மகள் வைத்தியர் சுப்னாவின் கணவரும் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments:

Post a Comment