மட்டக்களப்பில் பாரிய விபத்து ஒருவர் ஸ்த்தலத்திலே பலி - News View

Breaking

Post Top Ad

Monday, December 14, 2020

மட்டக்களப்பில் பாரிய விபத்து ஒருவர் ஸ்த்தலத்திலே பலி

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் தாழங்குடாவில் செவ்வாய்கிழமை (15) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்த்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிகுடி பகுதியிலிருந்து மட்டக்களப்பு பகுதியை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும், மட்டக்களப்பு பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி பகுதியை நோக்கிச் சென்ற காரும் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் நோருக்கு நேர் மோதியத்தில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மட்டக்களப்பு பங்குடாவெளியைச் சேர்ந்தவர் ஸ்த்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை முன்நெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad