மதுபானசாலைகளை மூடுவது குறித்து தீர்மானம் எடுக்கப்படவில்லை - கலால் திணைக்களம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 23, 2020

மதுபானசாலைகளை மூடுவது குறித்து தீர்மானம் எடுக்கப்படவில்லை - கலால் திணைக்களம்

நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் நிலைமைகளின் போதும், மதுபானசாலைகளை மூடுவது குறித்து தீர்மானம் எடுக்கப்படவில்லை கலால் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நாட்டின் மதுபானசாலைகள் சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் தற்போது வரை இயங்கி வருவதாக காலால் திணைக்கள பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பண்டிகை காலங்களில் மதுபானசாலைகளை மூடுமாறு சில குழுக்கள் ஊடகங்கள் மூலம் கோரிக்கைகள் விடுத்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், இலங்கையில் முதல் கொரோனா வைரஸ் அலையின் போது மதுபானசாலைகள் மூடப்பட்டன. 

இதனால் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மதுபானசாலைகள் மீள மூடப்பட்டால் அவ்வாறானதொரு நிலை உருவாகும் என்றும் கூறனார்.

தற்போது நாட்டில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் ஊரடங்கு உத்தரவின் கீழ் உள்ள அனைத்து பகுதிகளிலும் மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், குறித்த பகுதிகளை தவிர பண்டிகை காலங்களில் மதுபானசாலைகளை மூட எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment