இணையத்தில் அழகிகளை விற்ற கும்பல் சிக்கியது - 9 பெண்கள் உட்பட 11 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, December 24, 2020

இணையத்தில் அழகிகளை விற்ற கும்பல் சிக்கியது - 9 பெண்கள் உட்பட 11 பேர் கைது

(செ.தேன்மொழி)

இணையத்தின் ஊடாக அழகிகளை விற்ற கும்பலொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது 9 பெண்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

கல்கிஸ்ஸ பகுதியில் இருமாடி சொகுசு வீடொன்றில் குறித்த சட்டவிரோத செயற்பாடு இடம்பெறுவதாக குற்றத் தடுப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனடிப்படையில் கல்கிஸ்ஸ பொலிசார் பல நாட்களாக குறித்த வீடு மற்றும் அங்கு உள்ளவர்கள் குறித்து கண்காணிப்பில் ஈடுப்பட்டிருந்தனர்.

இவ்வாறானதொரு நிலையில் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்ற அனுமதியுடன் குறித்த வீடு இன்று (24) சோதணைக்குட்படுத்தப்பட்டது. இதன்போதே 9 பெண்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment