மெல்போர்னில் தரையிறங்கி இலங்கை விமான சேவைக்கு பெருமை சேர்த்த யு.எல் - 604 - News View

About Us

About Us

Breaking

Monday, December 7, 2020

மெல்போர்னில் தரையிறங்கி இலங்கை விமான சேவைக்கு பெருமை சேர்த்த யு.எல் - 604

கடந்த ஜூன் மாதத்தின் பின்னர் மெல்போர்னில் தரையிறங்கிய முதல் சர்வதேச விமானம் என்ற பெருமையை ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல்-604 என்ற விமானம் பெற்றுள்ளது.

அதன்படி இந்த விமானமானது நேற்று மாலை 16.45 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, இன்று காலை 07.53 மணியளவில் மெல்போர்னின் துல்லாமரைன் விமான நிலையத்தை சென்றடைந்துள்ளது.

மெல்போர்னில் தொடர்ச்சியாக 38 நாட்களில் எதுவித கொரோனா நோயாளர்களும் பதிவாகாத நிலையில் எட்டு சர்வதேச விமானங்களினூடாக 258 பயணிகளை முதற்கட்டமாக கொண்டு வருவதற்கு மெல்போர்ன் நடவடிக்கை எடுத்திருந்தது.

அந்த எட்டு விமானங்களில் மெல்போர்னில் தரையிறங்கிய முதல் விமானம் என்ற பெருமையை ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல்-604 என்ற விமானம் பெற்றுள்ளது.

இந்நிலையில் துல்லாமரைன் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ள பயணிகளை தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக விக்டோரியாவில் மறுசீரமைக்கப்பட்டுள்ள ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக அவுஸ்த்ரேலிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

துல்லாமரைன் விமான நிலையத்தில் தரையிறங்கும் அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு 170 க்கும் மேற்பட்ட அவுஸ்திரேலிய படை வீரர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment