55 வயதில் ஓய்வில் செல்ல விரும்பும் ஊழியர்களுக்கு சேமலாப, நம்பிக்கை நிதிய வைப்புக்களை பெறும் உரிமை - News View

About Us

About Us

Breaking

Thursday, December 24, 2020

55 வயதில் ஓய்வில் செல்ல விரும்பும் ஊழியர்களுக்கு சேமலாப, நம்பிக்கை நிதிய வைப்புக்களை பெறும் உரிமை

தொழிற்சங்கத் தலைவர்கள் நீண்ட காலம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 60 வரை அதிகரித்த போதிலும், 55 வயதில் ஓய்வில் செல்ல விரும்பும் ஊழியர் ஒருவர் ஊழியர் சேமலாப, ஊழியர் நம்பிக்கை நிதிய வைப்புக்களை பெறும் உரிமையை கொண்டுள்ளார் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று முனதினம் இடம்பெற்ற தேசிய தொழிலாளர் ஆலோசனை சபைக் கூட்டத்தில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தேசிய ஓய்வூதிய வயதெல்லை 60 வரை நீடிக்கப்படுமாயின், தற்போதைய கூட்டு ஒப்பந்தங்களில் கூறப்பட்ட விடயங்களையும் உள்ளடக்கி, புதிய சட்டத்தை திருத்த வேண்டிய அவசியம் உள்ளதாக முதலாளிமார் சம்மேளத்தின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க வீரசிங்க தெரிவித்தார்.

இந்த விடயத்தில் ஏதேனும் நியமங்களை சேர்க்கத் தேவை ஏற்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி, யோசனைகளை தம்மிடம் சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

அத்துடன், பேச்சுவார்த்தைக் குழுக்களை உடனடியாக கூட்டி, உரிய தீர்மானங்களை எடுத்து, தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment