இங்கிலாந்து, பஹ்ரைன் நாடுகள் பைசர் - பயோடெக் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கிய நிலையில் தற்போது கனடா அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் - ஜெர்மனியின் பயோடெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியது.
உலகின் முதன்முதலாக இந்த நிறுவனம்தான் ஆய்வு முடிவில் கொரோனா தடுப்பில் 95 சதவீத செயல்திறன் கொண்டதாக உள்ளது எனத் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து மொடர்னா உருவாக்கிய தடுப்பூசியும், ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் 95 சதவீத செயல்திறன் கொண்டதாக தயாரித்த நிறுவனங்கள் தெரிவித்தன.
பைசர் நிறுவனம் முதன்முதலாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வினியோகம் செய்ய ஏற்பாடு செய்தது. இதற்காக அமெரிக்காவின் FDA-யின் அனுமதியை கோரியது. FDA மிகவும் பாதிக்கக்கூடிய மக்களுக்கு வழங்கலாம் என அனுமதி அளித்தது. அதேபோல் ஐரோப்பியாவின் முக்கிய கட்டுப்பாட்டு அமைப்பும் ஒப்புதல் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி (பைசர் நிறுவனத்தின் மருந்து) செயல்பாட்டுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து பஹ்ரைன் நாடும் பைசர் மருந்தை பயன்படுத்த அனுமதி அளித்தது. இந்த நிலையில் 3-வது நாடாக கனடா பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அடுத்த வாரத்தில் இருந்து கனடாவில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட இருக்கிறது. சைபர் நிறுவனம் கனடாவுக்கு 7.6 கோடி டோஸ்கள் வழங்க இருக்கிறது.
No comments:
Post a Comment