(எம்.எப்.எம்.பஸீர்)
நாடளாவிய ரீதியில் 36 குற்றக் குழுக்கள் உள்ளதாக பொலிஸார், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அத்மிரால் சரத் வீரசேகரவுடன், அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றின் போது, பொலிஸார் இதனை அறிவித்துள்ளதுடன், அக்குழுக்களில் 24 குழுக்கள் தற்போதும் செயற்பாட்டு நிலையில் உள்ளதாக கூறியுள்ளனர்.
இந்த குற்றக் குழுக்களின் பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளமை தொடர்பிலும் இதன்போது அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து திட்டமிடப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் இவ்வாறான குற்றக் குழுக்களை ஒடுக்க போதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் சரத் வீரசேகர பொலிஸாருக்கு இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

No comments:
Post a Comment