இலங்கை மத்திய வங்கி அதன் 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக, புழக்கத்திற்கு விடப்படாத ஞாபகார்த்த நாணயக் குற்றியொன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி கடந்த 1950ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அதன் தொழிற்பாடுகாளை ஆரம்பித்தது.
அந்த வகையில் தனது 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் புழக்கதில் விடப்படாத ரூ. 20 பெறுமதியான நாணயக் குற்றியொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த நாணயக் குற்றி இன்றையதினம் (31) மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மனினால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உத்தியோகபூவர்மாக கையளிக்கப்பட்டது.
3,000 குற்றிகளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள இந்நாணயக் குற்றியை, இலங்கை மத்திய வங்கியின் பிரதான அலுவலகத்திலும், நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய கிளை அலுவலகங்கள் ஊடாகவும் ரூ. 1,300 எனும் விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என, மத்திய வங்கி அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment