துபாய் நகருக்கு இஸ்ரேல் நாட்டில் இருந்து வந்த முதலாவது விமானத்தில் 166 பயணிகள் வருகை புரிந்தனர். அவர்களுக்கு துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமீரகம் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், மருத்துவம், விமான போக்கு வரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இரு நாடுகளுக்கு இடையே பயணிகள் விமான போக்கு வரத்தை ஏற்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, இஸ்ரேர் என்ற முதல் விமானம் நேற்று முன்தினம் (01) மாலை 5.10 மணிக்கு 166 பயணிகளுடன் துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது.
அந்த விமானத்துக்கு துபாய் சர்வதேச விமான நிலையத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலைய அதிகாரிகள், பயணிகள் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
மீண்டும் இந்த விமானம் டெல் அவிவ் நகருக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானம் துபாய் மற்றும் டெல் அவிவ் நகரங்களுக்கு இடையே வாரத்துக்கு 14 முறை இயக்கப்படுகிறது.
இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறை மேம்பாட்டுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவையின் அதிகரிப்பு காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து அதிக விமானங்கள் வந்து செல்லும் விமான நிலையமாக இருந்து வருகிறது.
கடந்த 2019ம் ஆண்டு வரையிலும் தொடர்ந்து 6 ஆண்டுகளாக உலகின் முன்னணி விமான நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு மட்டும் 8 கோடியே 64 லட்சம் பயணிகளை துபாய் விமான நிலையம் வழியாக பயணம் செய்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாதத்துக்கு பின்னர் பல்வேறு நாடுகளுக்கு இடையே விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த ஜூலை மாதம் முதல் மீண்டும் விமான சேவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment