சீனாவின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 18, 2020

சீனாவின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது

சீனாவின் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும், எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதில் உலக நாடுகள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் 10 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. 

தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் சீனாவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்தநாட்டின் சினொவாக் பயோடெக் நிறுவனம் ஒரு தடுப்பூசியை தயாரித்து அதனை சோதனை செய்து வருகிறது.

இந்த நிலையில் சீனாவின் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும், எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மருத்துவ இதழான லான்சாட்டில் வெளியிடப்பட்ட கட்டுரையில் விஞ்ஞானி சூபெங்காய் கூறும்போது, ‘சினொவாக் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை 2 டோஸ் கொடுத்த பிறகு நோயாளிகளுக்கு 4 வாரத்துக்குள் எதிர்ப்பு சக்தி உருவானது தெரியவந்துள்ளது’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment