கொரோனாவை அறிய துரித அன்டிஜன் பரிசோதனை இன்று முதல் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 18, 2020

கொரோனாவை அறிய துரித அன்டிஜன் பரிசோதனை இன்று முதல் ஆரம்பம்

கொரோனா நோயாளிகளை கண்டறிய துரித அன்டிஜன் பரிசோதனைகள் (Rapid Antigen test) இன்று முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளதாவது, குறித்த பரிசோதனை முறை கொரோனா நோயாளர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் மற்றும் கொரோனா அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளுக்கு வரும் நபர்களுக்கு மேற்கொள்ளப்படும். 

இதன் மூலம் கொரோனா நோயாளிகளை விரைவாக அடையாளம் காண முடியும், ஏனெனில் இந்த பரிசோதனை மாதிரி சேகரிக்கும் இடத்தில் மேற்கொள்ளப்படும். இதற்காகப் பரிசோதனை கூடம் எதுவும் தேவையில்லை. இதன் மூலம் பரிசோதனை முடிவுகளை வெறும் 30 நிமிடங்களில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment