கிழக்கு மாகாண இறைவரித் திணைக்கள ஆணையாளராக வைரமுத்து மகேந்திரநாதன் நியமனம் - News View

Breaking

Post Top Ad

Monday, November 9, 2020

கிழக்கு மாகாண இறைவரித் திணைக்கள ஆணையாளராக வைரமுத்து மகேந்திரநாதன் நியமனம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் வகுப்பு 1 இல் (Class 1) சிரேஷ்ட பிரதி ஆணையாளராக இதுவரை கடமையாற்றி வந்த வைரமுத்து மகேந்திரநாதன், கிழக்கு மாகாணத்தின் இறைவரித் திணைக்களத்தின் மாகாண ஆணையாளராக கடந்த 2ஆம் திகதி முதல் கிழக்கு மாகாண ஆளுனரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 27 வருடங்களாக இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் வரி உத்தியோகத்தர், வரி மதிப்பீட்டாளர், உதவி ஆணையாளர், பிரதி ஆணையாளர், சிரேஷ்ட பிரதி ஆணையாளர் என பல பதவிகளையும் வகித்துள்ளார். 

இவர் இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் வரி மதிப்பீடு, வரி அறவிடுதல் போன்ற மேலதிக பயிற்சி நெறிகளை நிறைவு செய்திருந்தார். 

மட்டக்களப்பு செட்டிபாளயத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் செட்டிபாளைய மகா வித்தியாலயத்திலும், கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையிலும் கல்வி பயின்றார். இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியும் ஆவார். 

வ. மகேந்திரநாதன் தனது கடமைகளை கிழக்கு மாகாண சபையின் இறைவரித் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாக கடந்த வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad