மன்னார் கிராம சேவகரின் கொலையில் அதிரடி திருப்பம்! - News View

Breaking

Post Top Ad

Sunday, November 8, 2020

மன்னார் கிராம சேவகரின் கொலையில் அதிரடி திருப்பம்!

மன்னார் கிராம சேவகரின் கொலை தொடர்பில் கிராம சேவகர் ஒருவரின் கணவன் உட்பட இருவர் இலுப்பைக்கடவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் கிராம அலுவலர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும், கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் (வயது -55) என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை (3) இரவு தாக்கப்பட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் இலங்கை முழுவதும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கிராம சேவகர் ஒருவரின் கணவர் உட்பட இருவர் இலுப்பைக் கடவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

மன்னார் நிருபர் லெம்பட்

No comments:

Post a Comment

Post Bottom Ad