நீத்தை அம்பலத்தார் பிரதான வீதியை கொங்ரீட் வீதியாக இடுவதற்கான வேலைகள் அதாஉல்லா எம்.பியினால் ஆரம்பிக்கப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Sunday, November 8, 2020

நீத்தை அம்பலத்தார் பிரதான வீதியை கொங்ரீட் வீதியாக இடுவதற்கான வேலைகள் அதாஉல்லா எம்.பியினால் ஆரம்பிக்கப்பட்டது

நூருள் ஹுதா உமர்

அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அவர்களின் ஒரு லட்சம் கிலோமீட்டர் பாதைகள் என்ற வேலைத் திட்டத்தின் கீழ் இன்று அக்கறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட 8 கிலோமீட்டர் தூரம் கொண்ட நீத்தை அம்பலத்தார் பிரதான வீதி புணரமைக்கும் ஆரம்பகட்ட வேலைகள் 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர், உதவித் தவிசாளர், உறுப்பினர்களின் அயராத முயற்சியின் பிரதிபலிப்பாக இந்தப் பாதை இன்று ஆரம்பிக்கப்பட்டது .

பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்த இந்த பாதை இன்று கொங்கிரீட் பாதையாக இடுவதற்கு அக்கரைப்பற்று பிரதேச சபையின் அழைப்பை ஏற்று தேசிய காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் வருகை தந்து நிகழ்வுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

அத்துடன் பள்ளிவாசல் முற்றத்திலும் இந்த பாதையின் ஞாபகார்த்தமாக மரக்கன்றுகள் தேசிய காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவின் கரங்களால் நடப்பட்டது.

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறியியலாளர் சிறாஜூதின் உட்பட 
வீதி அபிவிருத்தி அதிகார சபையின்
பொறியியலாளர்கள், உத்தியோகத்தர்கள் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் செயலாளர் மற்றும் அம்பலத்தார் பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad