முதன் முதலாக டெங்கு மற்றும் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் - News View

Breaking

Post Top Ad

Sunday, November 8, 2020

முதன் முதலாக டெங்கு மற்றும் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம்

இலங்கையில் முதன் முதலாக டெங்கு மற்றும் கொரோனா தொற்றுடன் 29 வயதுடைய தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

இவ்வாறு இனங்காணப்பட்டவர் பேலியாகொட மீன் சந்தையுடன் தொடர்பு கொண்ட கொரோனா நோயாளி என நீர்கொழும்பு வைத்தியசாலையின் டெங்கு பிரிவின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த நபருக்கு ஏற்பட்ட அதிக காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட இரத்த பரிசோதனையின் பின் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அத்தோடு அவருக்கு தொடர்ந்தும் ஏற்பட்ட காய்ச்சலினால் 5 ஆம் நாள் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நோயாளியை தேசிய தொற்று நோயியல் பிரிவிற்கு சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad