அறுவாக்காட்டிலிருந்து பாலாவி சீமெந்து தொழிற்சாலைக்கு சுண்ணாம்புக்கற்கள் ஏற்றிச்சென்ற ரயில் மோதி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக, வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர். இன்று (02) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மதுபோதையில் காணப்பட்ட குறித்த இளைஞர், ரயில் பாதையில் நடந்து சென்றவேளை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வண்ணாத்திவில்லு, மிதிவத்தை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி நந்தன விமலவீர சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டதுடன், விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை வண்ணாத்திவில்லு பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.
(புத்தளம் நிருபர் - முஹமட் சனூன்)
No comments:
Post a Comment