ஞானசார தேரர் முஸ்லிம்களின் கலாச்சார விடையத்தில் தலையிடுவது ஒரு அடிப்படை நாகரீகம் அற்ற செயல் - கலாநிதி ஜனகன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 10, 2020

ஞானசார தேரர் முஸ்லிம்களின் கலாச்சார விடையத்தில் தலையிடுவது ஒரு அடிப்படை நாகரீகம் அற்ற செயல் - கலாநிதி ஜனகன்

ஷில்மியா யூசுப்

ஒரு இனம் அல்லது மதம் தனது இனத்தின் நம்பிக்கைகளை பெருமையாக பேசுவது அடிப்படைவாதமாகவோ அல்லது இனவாதமாகவோ அல்லது மதவாதமாகவோ அமையாது. ஆனால் தன்னுடைய இனம் அல்லது மதம் மட்டும்தான் என அகங்காரம் அடைவதும் தங்களுடைய எண்ணங்களை மற்றவர்களுக்குள் திணிக்க முயல்வதுமே அடிப்படைவாதம், இனவாதம் மற்றும் மதவாதம் என்பதனை ஞானசார தேரர் போன்றோர் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் ஞானசார தேரர் முஸ்லிம்களின் கலாச்சார விடையத்தில் தலையிடுவது ஒரு அடிப்படை நாகரீகம் அற்ற செயல் என்றும் கலாநிதி.வி.ஜனகன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இன்று இலங்கையில் மிக அதிகமான பேசு பொருளாக இருப்பது கொரோனா வைரசின் பரவலும் அதனால் ஏற்படும் மரணங்களுமே. இதில் கொரோனா காரணமாக மரணம் அடையும் இஸ்லாமியர்களுடைய உடலங்களை அவர்களுடைய மத நம்பிக்கையின் அடிப்படையில் புதைக்க வேண்டும் என்பது அவர்கள் சார்ந்த நியாயமான கோரிக்கையாகும். இதனை ஏற்றுக்கொண்ட நாட்டின் ஜனாதிபதி அவர்கள் இதற்கான அனுமதியினை சில நிபந்தனைகளுடன் அனுமதித்துள்ளார். இதனை நாம் வரவேற்க்க வேண்டும். இதில் பலர் அரசியல் செய்ய முற்பட்டார்கள். ஆனாலும் அதனைப் பொருப்படுத்தாது சரியான தீர்வை வழங்கிய நாட்டின் தலைவரின் இந்த செயற்பாடு பாரட்டுக்கு உரியதே. 

உலக சுகாதார மையம் (WHO) வழங்கிய அறிக்கையிலும் உடலை அடக்கம் செய்ய முடியும் என்ற நடைமுறை இருக்கும் போது சிறுபிள்ளைத் தனமான காரணங்களை முன்வைத்து பிற மதங்களின் நம்பிக்கைகளில் கைவைப்பதுதான் அடிப்படைவாதம் என்பதனை ஞானசார தேர்ர் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

உலக சுகாதார மையத்தின் (WHO) பரிந்துரைகளின் அடிப்படையில் நீர் வழங்கல் பிரதேசத்தில் இருந்து 200 தொடக்கம் 350 மீட்டர் தூரத்தில் 1.5 தொடக்கம் 3 மீட்டர் ஆளத்தில் உடல்களை புதைக்க முடியும். உடல் புதைக்கப்பட்ட ஆளத்தில் இருந்து 2 மீட்டருக்கு கீழ் நிலத்தடி நீரோட்டம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது. 

ஜனாதிபதி அவர்கள் WHO இன் பரிந்துரைகளை முறையாக பின்பற்றும்படி அறிவுறுத்தல் வழங்கி இருக்கின்றார். எனவே இந்த பிரச்சினையில் வேறு விளக்கங்களை ஞானசார தேரர் போன்ற அடிப்படைவாதிகளுக்கு வழங்க வேண்டிய அவசியமில்லை என்றார். இந்த அறிவிப்பினை மீண்டும் தமது அரசியல் துரும்பாக பயன்படுத்தி பிற மத்தத்தாருடைய மத நம்பிக்கைகளில் அரசியல் செய்ய வேண்டாம் என வினையமாக கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment